2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘சாய்ந்து படுத்தபடி சாதனை செய்ய முடியாது’

Editorial   / 2018 ஜூன் 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதீத கற்பனைகள் ஆபத்தானவை. கண்டபடி கற்பனைகளை ஓடவிட்டுத் தரக்குறைவான கதைகளை உருவாக்க வேண்டாம். கலாசார பாரம்பரியங்களைத் தவறான கண்ணோட்டத்துடன் பரப்பியும் வருகின்றனர்.

அறிவைத் தூய்மையாக வைத்திருந்தால், சித்தம் சிதறாது.கற்பனை வளம் உத்தமமாய் அமையும். நற்பண்பு உள்ளவரால்த்தான் அற்புதமான கற்பனையூடாக நல்ல காரியங்களை ஆற்றிட முடியும்.

சோம்பேறிகள் பொழுது போக்குக்காக, மனதைக் கண்டபடி ஓடவிட்டுப் பொய்யான விடயங்களுக்குப் புது வேஷம் கொடுப்பார்கள். சாய்ந்து படுத்தபடி சாதனை செய்ய முடியாது.

உழைக்காமல் இருக்கும் மனிதர்களுக்கு, அடுத்தவன் செய்யும் எதுவுமே, அது எளிதானது எனச் சொல்லிவிடுவார்கள். புல்லையே அசைக்கத் தயங்குபவர்கள், மலையை உடைத்துக் கோட்டை கட்டுவார்களா? சொல், செயல் வல்லவனுக்கே உரியது. 

வாழ்வியல் தரிசனம் 13/06/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .