Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்ணையாளர் தனது நிலபுலன்களைப் பார்வையிட வயலுக்குச் சென்றார். நிலக்கடலை மூடைகள், வண்டிகளில் ஏற்றுவதற்குத் தயாராக அடுக்கப்பட்டிருந்தன. அங்கு வேலைசெய்த ஏழைத் தொழிலாளியின் சின்னப்பையன் ஒரு நிலக்கடலையை உரித்துச் சாப்பிட்டதைக் கண்டதும் அவருக்குக் கோபம் மேலிட்டது.
“அடேய் என்னடா செய்கிறாய்? எங்கே இவனது தந்தையை அழைத்துவாருங்கள்” எனக் கட்டளையிட, அவனும் வந்தான்.
“என்ன தைரியம், உனது மகன், வேர்க்கடலையைக் களவாடிச் சாப்பிடுகிறான். உங்கள் குடும்பம் இங்கே இருக்கக்கூடாது, புறப்படுங்கள்” எனக் கர்ஜித்து விட்டுச் சென்றுவிட்டார். அவர் கட்டளையை ஏற்காது இருக்க முடியுமா?
பண்ணையார் புறப்பட்டுச் சென்ற வழியில், அவரது ஏக புதல்வன் குடிபோதையில் நடுவீதியில் கிடந்தான். கவலையுடன் அவனைத் தனது வாகனத்தில் ஏற்றி, வீட்டுக்கு வந்தபோது, மனைவி ஓவென்று கதறியபடி வெளியே வந்தாள். மகள் யாருடனோ ஓடிப்போன சங்கதியை கூறினாள். உச்சந்தலையில் இடிவிழுந்தவர் போலானார். செய்கின்ற வினைகள் மீளத்துரத்தித் துரத்தி அடிக்கும்.
வாழ்வியல் தரிசனம் 20/02/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .