2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சுதந்திரமாகக் கண்டபடி நடப்பவர்கள்…

Princiya Dixci   / 2016 நவம்பர் 03 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுக்களை உடைத்தல் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. சுதந்திரமாகக் கண்டபடி நடப்பவர்கள் தங்கள் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டதாகக் கருதுகின்றார்கள். 

விருப்பப்படி, சுதந்திரம் எனும் பெயரில் சுற்றித் திரிந்து அடாத செயல் புரிவது, அவிழ்க்க முடியாத கட்டுகளை தங்கள் ஆன்மாவுக்குள் இறுக்கிக் கொள்வதாகும். 

பண்பற்று வாழும் இன்றைய இளைய சமூகத்தில் சிலர் தங்கள் வினைக்குள், தாங்களே அகப்பட்டுச் சீரழிந்து போகின்றார்கள். 

தீய சிந்தனைகளை, தீய செயல்களை அறுத்து, உண்மை வழியில் சதா இயங்குவதே கட்டு உடைத்தலின் சீரிய கருத்துமாகும். அரசியல் சீர்திருத்தம், சமூக நலனுக்கான விழிப்புணர்வு, மூடக்கொள்கைகளை ஒடித்தல் எல்லாமே நாம் ஆற்ற வேண்டிய அரும் பணிகளுமாகும். செய்திடுவீர்! 

வாழ்வியல் தரிசனம் 03/11/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .