Princiya Dixci / 2016 டிசெம்பர் 09 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருவர் பலவீனமான நிலையில் இருப்பதற்கு முதற்காரணம் அவரேயாவார். அடுத்ததாகவே புறச் சூழ்நிலையாகும்.
தன்னை விடுவித்துச் சுதந்திரமான மனிதனாக வாழ முயல வேண்டும். தன்னைத்தான் ஒரு கட்டுக்குள் சிறைப்படுத்திக் கொண்டால், அவனால் எங்கே விடுதலை பெறமுடியும்?
உலகம் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது. அதனை ஏற்காமல், தான் சொல்வதுதான் சரி என வாதிடுபவர்கள், நல்லவை எங்கிருப்பினும் அதனை ஏற்கும் பக்குவத்தைத் தங்களது மனத்துக்குச் சொல்ல வேண்டும்.
தங்களைப் புதுப்பித்துக் கொள்ளப் பலர் அச்சப்படுவதாலேயே, மன உழைச்சலும் பலவீனமான, நிலை தடுமாறிய, முடிவு எடுக்க முடியாத சோர்வும் ஏற்படுகின்றது.
எதனையும் மூடி மறைக்காத வெளிப்படைத் தன்மையே துணிச்சலையும் செயற்திறனையும் வலுப்படுத்தும்.
மனித வலு எதனையும் செய்ய வல்லது. உடலுடன் மனம் இசைவுபட இணைய வேண்டும். அதுவும் உற்சாகத்துடன் இணைய வேண்டும்.
வாழ்வியல் தரிசனம் 09/12/2016
பருத்தியூர் பால – வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .