2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

சும்மா இருப்பது சௌகரியமல்ல!

Princiya Dixci   / 2016 நவம்பர் 18 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறரிடம் கடன்பட்டு வாழ்வது மட்டும் வறுமை நிலை அல்ல! தேவையற்ற விதத்தில் தன்னால் முடிந்த கருமங்களைக் கூட, மற்றவரிடம் எதிர்பார்ப்பதும்கூட வறுமை நிலையினை ஒத்த சமாச்சாரம்தான்.  

இல்லாமையினை வறுமை என்கின்றோம். அப்படியாயின் துணிச்சல் இல்லாமையும் ஒரு வறுமை நிலைதான்.  

இதற்கும் மேலாக எவன் ஒருவன் கல்வி கற்றலில் நாட்டம் இன்றியும் கல்வி என்பதையே அறியாமல் வாழ்கின்றான் என்றால், பணம் இருந்தும் அவன் கல்வியில் வறுமை மிக்கவன் ஆகின்றான்.  

இன்று சகலரும் தங்கள் தங்கள் முயற்சியினால் வாழ வழி இருக்கின்றது. நோய், இயலாமை தவிர்ந்த காரணமின்றிப் பிறரிடம் கடமைப்படுவது சுய கௌரவத்தை இழப்பது போலாகும் அல்லவா? சும்மா இருப்பது சௌகரியமல்ல!    

 

வாழ்வியல் தரிசனம் 18/11/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X