Editorial / 2017 ஜூன் 22 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக யதார்த்தங்களை உணராதவரை துன்பங்கள்தான் மிஞ்சும். இதுஇப்படித்தான் என வாழும் முறையை அறக்கருத்துகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
இதைச் செவிமடுக்காமல், திடீரெனக் குறுக்கு வழியில் பணம்புரட்டப் போவதும், தெரியாத கருமங்களில் நாட்டம் கொண்டு, இருப்பதையும் இழப்பதும் சாதாரண சம்பவங்களாகி விட்டன.
இன்று இருப்பது, நாளை வேறுவிதமாக மாறிவிடும். அன்றன்றைய மாற்றங்களை உள்வாங்கி நீதி, நியாயங்களுடன் நாம் செயற்பட வேண்டும். யாரோ ஒருவனோ, ஒருத்தியோ தீயவழியில் சட்டவிரோதமாகச் செயற்பட்டால், அதுவே புத்திசாலித்தனமான முயற்சி எனக் கருதிவிடக்கூடாது.
பல நபர்கள் பங்குச்சந்தையில், அது குறித்த அறிவு எதுவும் இல்லாமல், அதற்குள் புகுந்து அல்லல்பட்ட சந்தர்ப்பங்களை நீங்கள் சந்தித்திருக்கலாம்.
குடும்ப வாழ்க்கையிலும் கணவன், மனைவி இருவரும் தமது பிள்ளைகளுக்குச் சமூகத்தின் யதார்த்தநிலை, குடும்பநிலை குறித்துப் புரியவைக்க வேண்டும். தக்க அறிவூட்டல் இன்றியமையாதது. அவர்கள் புரிந்து கொள்வார்கள்.
வாழ்வியல் தரிசனம் 22/06/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .