Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 18 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கோவில் திருவிழா; கூட்டம் அலை மோதியது. கூட்டத்தின் நடுவே சின்னஞ் சிறுவன் ஒருவன், கேவிக்கேவி அழுதபடி நின்றிருந்தவனை, ஒரு பொலிஸ்காரர் கண்டுகொண்டார். “என்ன தம்பி அப்பா, அம்மாவைத் தவற விட்டுவிட்டாயா” என்று அனுதாபத்துடன் கேட்க, அவனிடம் பதில் வரவில்லை. அழ ஆரம்பித்து விட்டான். “அப்பா என்ர அப்பா” என ஈனஸ்வரத்துடன் அழுதவன், மயங்கி விழுந்தான்.
அவனைத் தூக்கி அணைத்தபடி, கோவிலில் அமைந்த, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, முதலுதவி செய்து, அன்புடன் “அழாதே, உன் அப்பாவிடம் உன்னை ஒப்படைப்பேன்” என்றார்.
தவறவிடப்பட்ட பையனைப் பெற்றுச் செல்லுமாறு, ஒலிபெருக்கியில் அறிவுப்புச் செய்தார். ஒருவருமே வரவில்லை; மாலையாகி விட்டது; பையன் உண்ண மறுத்தான். பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்து, பையனை அநாதை இல்லத்தில் ஒப்படைத்தார்.
திருவிழா நடந்த தினம்; மத்தியான நேரம், ஒருவர் தட்டுத்தடுமாறி நடந்துகொண்டிருந்தார். “என்ன ராசா நான் என்னடா செய்வேன்? நோய் என்னை வருத்துகிறது; உன் தாயும் போய் விட்டாள். உன்னை இங்கு விட்டுவிட்டுப் போவதைவிட என்னால் என்ன செய்ய முடியும்” எனக் கூறி, தரையில் நினைவிழந்து விழ, அவனது ஆவி பிரிந்தது.
வாழ்வியல் தரிசனம் 18/04/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago