Editorial / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அணுகுண்டுக்குப் பயப்பிடாதவர்கள், சின்னஞ்சிறு நுளம்புக்குப் பயப்படுவார்கள். சிலவகை நுளம்புகள் கடித்தால், அரை மணித்தியாலம் வரையும் வலி எடுக்கலாம்.
கண்களுக்கே புலப்படாத கிருமிகள், மனித வர்க்கத்துக்குச் சவால் விடுகின்றன. எங்களால் எதுவுமே முடியும் என எண்ணும் மனிதரின் ஆணவம், கிருமிகளிடம் பலிப்பதில்லை.
உலகில் பல கோடி மக்களுக்கு, நோய்கள் பீடிப்பதற்கு விஷக்கிருமிகளே காரணமாகின்றன. விஞ்ஞானிகளும் இவைகளுக்கு எதிராக, பற்பல கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்த வண்ணமே உள்ளனர்.
எனினும், புதிது புதிதாக நோய்கள் உருவாகியபடியே இருக்கின்றன.உலக மக்கள் தொகையைக் குறைக்க, இயற்கை, இந்த விதமாகக் கிருமிகளை உருவாக்குகின்றதோ என எண்ணத்தோன்றுகின்றது.
சுகாதாரச் சீர்கேடு பற்றி, இன்னமும் மக்கள் பூரணமாக உணர்வதில்லை. வாழ்க்கை நடைமுறையில் மக்கள், தவறான வழியில் செல்வதும், நோய்களுக்கான காரணமாகும். தவறுகள் எங்கே ஆரம்பிக்கின்றன எனத் தேடுக.
வாழ்வியல் தரிசனம் 08/10/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
24 minute ago
29 minute ago
49 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
29 minute ago
49 minute ago
53 minute ago