2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘தான, தர்மம் இல்லை. எனவே மழையும் இல்லை’

Editorial   / 2017 ஒக்டோபர் 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எங்கள் முன்னோர்கள் காலத்தில், சமூகத்தில் அந்தஸ்தில் உள்ளவர்கள் சான்றோர்களாகவே வாழ்ந்து காட்டினார்கள்.  

ஆனால் இன்று, அரசியல் குளறுபடிகள், மனித ஏற்றத்தாழ்வுகள், தெய்வ பக்தி இன்மை, சுயநலம் போன்ற பல காரணங்களினால் துரோகிகளும் வன்முறையாளர்களுமே தங்களைப் பெரியவர்கள், உத்தமர்கள் போல் காட்டிக்கொண்டிருக்கின்றனர். 

முயற்சி இல்லாமலேயே இத்தகையவர்களுக்கு எல்லாமே கிடைத்துவிடுகின்றது.

சட்டவிரோத நடவடிக்கைகள், அராஜகம் போன்ற வழிமுறைகளூடாகப் பணம், செல்வாக்கு ஆகியவற்றைப் பெற்று விடுகின்றனர். நீதிகோணலாகி அதுவே உண்மைபோலாகி விட்டது.  

தான, தர்மம் இல்லை. எனவே மழையும் இல்லை. அந்நிய நாட்டுக்கு நிலம், வளம் எல்லாமே விற்கப்படுகின்றது. மக்களும் இதுபற்றிப் பேசுவதும் இல்லை. அறத்தை மறந்தால், நிறைந்த வாழ்வு எப்படிக் கிடைக்கும்? 

     வாழ்வியல் தரிசனம் 03/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .