Editorial / 2017 செப்டெம்பர் 26 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாணயமும் ஒழுக்கமும் அற்றவர்கள் சூழுரைத்தல் அர்த்மற்ற அருவருப்பான செயல். இன்று சட்ட விரோதமான காரியங்களையும் மக்கள் விரோத செயல்களையும் செய்யும் பாதகர்களே தாங்கள் மிகவும் நல்லவர்கள் போல் சூளுரைக்கின்றார்கள்.
தாங்கள் மக்கள் விரோதிகளே அல்லர் எனப் பாசாங்கு செய்யும்போது, மக்கள் மௌனித்து விடுகின்றனர். வெளிப்படையாகப் பேசுவதற்கு அச்சப்படுகின்றனர்.
யாரேனும் வாய் திறந்தால், அவர்கள் கதி அதோ கதிதான். சட்டம் எல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டேயல்ல.
எதையும் தங்களால் செய்து முடிக்க முடியும் எனச் சூழுரை செய்யும் இவர்களை பொதுமக்களும் அரசாங்கமும் கண்டுகொள்ளாது விடில், ஜனநாயகம் அரசோச்சுவது எங்ஙனம்? துஷ்டரை விரட்டுக; தண்டனை கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.
வாழ்வியல் தரிசனம் 26/09/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .