2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தீயவற்றை எதிர்க்க தயக்கம் எதற்கு?

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபாசப் பாடல்கள் இப்போது மட்டுமல்ல, எப்பொழுதோ திரைப்படத்தில் புகுத்தப்பட்டு விட்டன. இந்த விஷக்கிருமி ஜனித்தது முதல் இன்னமும் தீர்க்காயுளுடன் வாழ்ந்து வருகின்றது.

உண்மையான காதலர் கொச்சையாகப் பேசமாட்டார். கீழ்த்தரமான பாடல்களை ரசிக்கவும் மாட்டார். ஆனால் இதுபற்றி ஒன்றுமே பேசாமல், எதிர்ப்புக் காட்டாமல், தணிக்கையினையே மேற்கொள்ளாமல் இருப்பவர்கள், இன்றுதான் ஏதோ இது அரங்கேற்றப்படுவது போல் போராட்டங்களை நடத்துவது எரிச்சலூட்டும் வேடிக்கை‚ முளையிலேயே கிள்ளி எறிவது போல, ஆரம்பத்திலேயே இந்தப் போராட்டங்கள் நிகழ்ந்திருந்தால் இந்நிலை வருமா?

திரைப்படங்களில் எத்தனை சதவிகிதம் தூய்மையான காட்சிகளை, வசனங்களைப், பாடல்களைச் சொல்லியும் காட்டியும் வரப்படுகின்றது?

பணம் பறிக்கும் படாதிபதிகளுக்கு நியாயம், தர்மம், கலாசாரம் பற்றிய அக்கறை இல்லவேயில்லை. எல்லாமே வியாபாரம்தான். ஓரிரு நல்லவர்கள் மட்டுமே விதிவிலக்கு‚ தீயவற்றை எதிர்க்க தயக்கம் எதற்கு?

வாழ்வியல் தரிசனம் 18/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .