Princiya Dixci / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெற்றுக்கொண்ட வெற்றி, புகழுக்கு அழகு சேர்ப்பது செருக்கற்று இருப்பதாகும். அவ்வண்ணமே வெற்றிப் பாதைக்குப் பிறரையும் அழைத்துச் செல்வதற்கான வழிகளை மேற்கொள்வதுமாகும்.
எங்களது அனுபவங்களினூடான அனுகூலங்களை நாங்கள் மட்டுமே பெற எண்ணுவது கூட சுயநலமானதுதான்.
நல்ல திறமைசாலிகள்கூட செல்லும், திசை தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றார்கள். தகுந்த ஆலோசனைகளை இத்தகையோருக்குச் சொல்லிக் கொடுத்தால் உங்களுக்கான இறைவனின் கொடுப்பனவு பன்மடங்காகிப் பெருகிவிடும்.
காணும் எவரேயாயினும் அவர்கள் நம்மவர்கள் என எண்ணும் மனப்பான்மையை உருவாக்கினால் பூமி புதுப்பொலிவுடன் எம்மை நோக்கும். தன்னலமற்ற ஆசான்போல் தெரிந்ததை அனைவருக்கும் ஊட்டுக!
வாழ்வியல் தரிசனம் 05/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .