Princiya Dixci / 2016 ஒக்டோபர் 26 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்திரமில்லாத மனோநிலையுடன் வாழுபவர்களின் பேச்சுக்களில் நிதானம் இருக்காது. தாம் சொன்ன பேச்சையே தாங்களே மறுத்துரைப்பார்கள். கேட்டால் எப்போது அப்படிச் சொன்னேன் என்பார்கள் அல்லது அப்போது அப்படித் தெரியாத்தனமாகச் சொல்லிவிட்டேன் என்று சொல்லிவிடுவார்கள்.
நெஞ்சத்தை நிமிர்ந்த நிலையில் வைத்திருப்பதும் சுலபமானது அல்ல; பேசும்முன் யோசிக்க வேண்டும். நிதானமாக நெஞ்சை அதன் உறுதியுடன் வைத்திருக்க ஆத்மீக நாட்டம் அவசியமாகும்.
இதயத்தை ஆசுவாசப்படுத்த உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் யோகாசனத்தில் ஈடுபடுதல் நல்லது. நல்ல நூல்களைப் படித்தால் எண்ணங்களும் செம்மைபெறும்.
எவருமே குறை சொல்லக் கேட்டு வாழ்வதைவிடத் தங்களின் கருமையைக் களைவதே பிரதானமானது. நல்ல மாற்றங்கள் போற்றுதலுக்குரியதே!
வாழ்வியல் தரிசனம் 26/10/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .