2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘நாளையும் மனிதன் வருவான்’

Editorial   / 2018 மே 14 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலப்பெரு வெளியினூடாக மானுடப் பயணங்கள் நடந்தபடியே உள்ளன. இந்தப் பயணத்தில் குதூகலமும் மங்கலமும் குளிரின் கதகதப்பும் உஷ்ணத்தின் சேட்டைகளும் காற்றின் மெல்லிய ஓட்டமும் - வேகமும் கடலின் மெனமும் - ஆர்ப்பரிக்கும் குமுறல்களும் மலையின் யௌவனமும் எரிமலையின் சீற்றங்களையும் கண்டபடியே, மக்கள் நடந்தபடியே...  

எங்கே தொடங்கியதோ, அதே புவனத்தின் மடியில் புரண்டு படுத்து, முடிவில் விழிகள் பனிக்க, உயிரை விடுவித்து மூச்சை நிறுத்துகின்றான். இது இயற்கையான சங்கதி. எல்லோருக்கும் இந்த அனுபவம் நடப்பது சர்வசாதாரணம். அழுது அரற்றுதல் அநாவசியம். 

எனவே, அச்சப்பட்டு அச்சப்பட்டு குறுகி நெளிந்து, ஓடி ஓடி ஒழிக்க இடமின்றி, இதுதான் வாழ்வா எனச் சொல்வதை விடுத்து, நிமிர்ந்து நடந்தால் என்னே உன் வீரம். இதுவே, மானுடன் என்றும் இருப்பான் என்னும் உயிர்ப்பு நிலை.  

நாளையும் மனிதன் வருவான்; ஒருவர் போகத் தொடரும் மனிதப் படையணி. துன்பப் படையெடுப்பை உங்கள் அறிவால் ஓட்டுக. உங்களால்த்தான் பயம் உங்களைப் பயமுறுத்த விழைகிறது. இருக்கும் வாழ்வு நிலையானது. அடுத்தவனுக்குப் பாடம் புகட்டுகிறது.

வாழ்வியல் தரிசனம் 14/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .