Princiya Dixci / 2017 ஜூன் 09 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேர்மையுடன் வாழ்பவனுக்கே கர்வம் கொள்ளும் அதிகாரம் உண்டு. பிறர் பணத்தைச் சுரண்டும் காசுக்காரர்களுக்குக் கர்வப்படும் யோக்கியதை கிடையாது.
ஊரைக் கொள்ளையடிப்பவர்களே உயர் நிலையில் இருப்பதாக எண்ணிக் கொள்கின்றான். ஆனால், தனது வரண்ட நிலையைத் தனது மனச்சாட்சிமூலம், அறிந்து கொண்டால் தனது சுய உருவைப் புரிந்து கொள்வான்.
அமைதியான வாழ்வு, இறைவன் தரும்போது, அங்கு நேர்மை பரிசீலிக்கப்படுகின்றது. பொருளீட்டுதல் தப்பானது அல்ல; அதனைத் தர்ம நெறிமூலம் ஈட்டுதலே முறைமையானது.
கெட்டவர்களுக்கு ரோசம் கிடையாது; அது வரவும்கூடாது. சமுகத் துரோகிகள் தலைவர்களாக நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்குத் தூக்கம் கிட்டாது. உண்மையான வாழ்வு நிம்மதியானது.
வாழ்வியல் தரிசனம் 09/06/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .