2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பரந்த உலகைப் பிள்ளைகளுக்கு காட்டுக

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 28 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயநலத்துடனும் கர்மித்தனத்துடனும் வாழும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளையும் தங்களைப் போலவே உருவாக்கிக் கொள்கின்றார்கள். நாங்கள் மட்டுமே வாழ வேண்டும் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதே; உதவிகளைப் பிறருக்குச் செய்து ஊதாரியாகாதே என அடிக்கடி நினைவு படுத்தும் பெற்றோர் சிலர், எல்லோருக்குமே நல்ல சுபீட்சமான எதிர்காலத்தினை அமைக்க வேண்டும் என எண்ணிப்பார்த்தேயாக வேண்டும்.  

தனித்து வாழ்வது முடியாத காரியம். ஆனால், சிலர் இப்படியான பெரிய உண்மைகளை விடுத்து பணம் படைத்தவர்களுடன் மட்டும் இணங்கினால் போதும் என எண்ணுகின்றார்கள்.  

ஏழைகளுடன் தோழமை கொள்ளாது, செல்வந்தர்களுடன் அட்டைபோல ஒட்டுவதே எதிர்கால நலனுக்கு உகந்தது எனத் தப்புக் கணக்குப் போடுகின்றார்கள்.  

இன்று செய்யும் தர்மம், நாளைக்குப் பெரும் முதலீடாகும் என்பதை உணர்வோமாக. பரந்த உலகைப் பிள்ளைகளுக்குக் காட்டுக. அடைபட்ட வீட்டில் படுத்துக்கிடக்கலாகாது.

 

வாழ்வியல் தரிசனம் 28/12/2016

பருத்தியூர் பால – வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .