2025 மே 01, வியாழக்கிழமை

‘பூமிக்கான இழப்பு’

Editorial   / 2018 ஜூலை 23 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலரும் தங்களைத் தாங்களே சுயபரிசோதனை செய்யாமல் இருப்பதால்தான், தங்களை உணராமல் இருக்கிறார்கள். அத்துடன், ‘நான்தான் மேலானவன்’ என்ற தன்முனைப்புடனும் காலம் முழுவதும் தவறான எண்ணங்களுடனும் வாழ்ந்து தீர்க்கின்றனர். 

தனது உண்மையான திறன்களை உணர்ந்து, தன்னைத்தான் செதுக்கும் மகா வல்லமையைச் சுயபரிசோதனை மூலம் பெற்றுவிடுகின்றான். களிம்பால் பூசப்பட்ட உலோகம், தன் சுய ஒளியைக் காணாமல், கண்டுகொள்ள விரும்பாத நிலைபோல் வாழ்வது துரதிர்ஷ்டமானது. 

இன்று, மிகவும் திறமையானவர்கள், தங்களைப் பற்றியே அறியாமல், பிறருக்கு தங்களது திறமைகளை வழங்காமல் இருப்பது, பூமிக்கான இழப்புத்தான். 

போலிகளைக் கோலோச்ச அனுமதிக்கும் உலகம், நல்லவர்களையும் வல்லவர்களையும் வெளிக்கொணர ஏன் மறுக்கின்றது?  

திறமைசாலிகள் தயங்காமல் துணிச்சலுடன் உலகின் முன் நிமிர்ந்து, கர்வத்துடன் நிற்பார்களாக. வாழும் பூமிக்கு வழங்கும் சேவைகளைப் பயமின்றி ஆற்றுவீர்களாக. இது உங்கள் வீடு; வாழும் தாய் நாடு. உங்களை உணருங்கள். 

வாழ்வியல் தரிசனம் 23/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .