2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘மக்கள் கரிசனை: இறை தரிசனத்துக்கு ஒப்பானது’

Editorial   / 2017 ஒக்டோபர் 11 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்றுமே தெளிந்த உள்ளத்துடன் நல்லதை மட்டும் பேசினால், அவை பிறர் மனத்தில் நிலையாக நிலைத்துவிடும்.  

மேலும், இத்தகையோர் பேச்சுகள், எல்லாமே சத்திய வசனங்களாகி விடுகின்றன. அன்பை மனதில் வைக்காமல், ஏனோதானோ என்று பேசும் சொற்கள் மதிப்பற்றவை.  

பேச்சில் நளினமும் ஆதரவும் இருத்தல் அவசியம். ஆனால், துணிச்சலை உருவாக்காத உரைகள் உடன் கரைந்து போகும். மக்களை ஆதரித்துப் பேசுபவர்களிடையே சுயநலம் கலத்தலாகாது. முழுமையானவர்களை மக்கள், தம்வசம் சுவீகரித்து விடுகின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே, அவர்களைக் காணப் பிரியப்படாமல், ஒளித்து விளையாடுகின்றார்கள். சுயநலத்துக்காக நல்ல சொற்களைத் தேடி, மக்கள் முன் தூவி, அர்ச்சனை செய்வது நரித்தந்திரம். மக்கள் மீதான கரிசனை இறை தரிசனத்துக்கு ஒப்பானது.

      வாழ்வியல் தரிசனம் 11/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .