2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

மதம், வாதத்துக்கு உரியதல்ல!

Princiya Dixci   / 2017 ஜனவரி 25 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதப்பற்றைவிட ஆழ்ந்த இறைபக்தியே மேலானது. இன்று மதப்பற்று எனும் போர்வையினுள் நடைபெறும் அராஜகங்கள் சொல்லில் அடங்காது. 

‘பற்றை ஒழிப்பாயாக; பக்தியை வளர்ப்பாயாக’ என்பதுவே நல்வாக்கியமாகும். உண்மையான ஆன்மீகவாதிக்குத் தனது மதம் பற்றிய வெறி இருக்காது. ஆன்மாவை வளம்படுத்தும் ஆத்மீகத்துக்குள் இருள் பரவாது. 

இன்று உலகம் அமைதி இழப்பதற்கு முக்கிய காரணம், தூய ஆன்மீகம் பற்றியே தெளிவூட்டல் இன்மையாகும். எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன.  

தவறு மனிதர்களிடத்தில் மட்டும்தான்; சமயங்களில் அல்ல. மாற்றுக் கருத்துகளைத் திரிவுபடுத்தி, புரட்டுக்கதை பேசுவதில் சரிவு யாருக்கு? மதம், வாதத்துக்கு உரியதல்ல! 

 

வாழ்வியல் தரிசனம் 25/01/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X