2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மனசை அலட்டிக் கொள்பவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

'போன வாரம் நீ பெண் பார்க்கப் போனாயே அவரைப் பிடித்திருந்ததா?' என எனது நண்பர் ஒருவரைக் கேட்டேன். மனத்தாங்கலுடன் 'பெண் அழகாக இல்லை; வேண்டாம் என்று விட்டேன்' என்றார்.

'அதுசரி போன மாதம் நீ பார்க்கப் போன பெண் பிரமாதமான அழகி என்று சொன்னார்களே, அது எப்படியாயிற்று'  என்று திருப்பிக் கேட்டேன்.

அவர் சொன்ன பதில் எனக்கு ஆச்சரியத்தையும் கோபத்தையும் ஊட்டியது. 'இப்படியான அழகிகளை நம்பமுடியாது; அதுதான் வேண்டாம் என்றேன்' என்றார்.

இப்படியாகத் திருப்திப்படாத மனநிலையுடன் வாழ்ந்து, முதுமையைத் தொட்ட பலர் இன்னமும் பெண் தேடும் படலத்தை விடுவதாக இல்லை.

தீர்மானம் எடுக்காமல் குழம்பியபடியே, கண்டபடி மனசை அலட்டிக் கொள்ளுபவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களே அல்லர். கண்டபடி காரணம் சொல்பவர்கள், குட்டிக் கரணக்காரர்களே‚

வாழ்வியல் தரிசனம் 07/09/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .