2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘மனதைச் செயல் திறன் ஆக்குக’

Editorial   / 2018 மே 15 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனம் இன்றி மனிதன் இல்லை. இதை விலக்கி எம்மால் இயங்க முடியாது. மனம் எங்களை விழிக்க வைக்கிறது. இதுவே எங்களை உறங்கவும் வைக்கிறது. விழிப்பூட்டும் வாழ்க்கையை மனமே உருவாக்கும். சதா சோம்பலுடன் உறங்கி, ஓய்ந்தபடி இருக்கவும் செய்துவிடுகிறது. எல்லா வேளைகளிலும் நாம் மனம் சொல்வதைக் கேட்கக்கூடாது. அதை ஆசுவாசப்படுத்தியபின் சிந்திக்க வேண்டும். அனுபவ ஞானம் அசாத்திய வல்லமை நிறைந்தது. கொஞ்சமாவது எமது கருமங்களின் நிலையை ஆராய்ந்தால் என்ன?

ஸ்தம்பிக்கும் நிலைக்குள் எம்மை நாம் ஆளாக்கக் கூடாது. அதீதமான அறிவுரை எனும் பேச்சுகளே, ஒருவரை உன்மந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றது. அதாவது செயலற்ற, செய்வது எது என்று தெரியாத நிலை.

கண்டபடி எவரையும் பேச அனுமிப்பதே ஆபத்தானது.தனிமைக்கு நேரம் ஒதுக்குக. கேட்பது வேறு; செவிமடுப்பது வேறு. போதனைகளை நாங்கள் கேட்கின்றோமா, அல்லது மனதில் உள்வாங்குகின்றோமா?

ஆலோசனைகளை உணர மனதுக்கும் நெஞ்சத்துக்கும் சமகௌரவம் வழங்குக. இறக்கும் வரை மனது இயங்கும். மரணம் தொட்டால் யாவுமே போய்விடும். எனவே, மனதைச் செயல் திறன் ஆக்குக. நற்போதனைகளைச் செவிமடுத்து, நல்லதை மட்டும் ஆற்றுக.

வாழ்வியல் தரிசனம் 15/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .