2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘மனம் மாறும் தன்மை கொண்டது’

Editorial   / 2018 மே 02 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்போதும் ஒரே வழியில் சிந்திக்க வேண்டும் எனக் கருதுதல்  முழுமையாகாது. சில செயல்களை முழுமையாகச் செய்துமுடிக்க, வேறு இலகுவழி உண்டா எனவும் சிந்திக்க வேண்டும்.  

சிரமமான பணியை இலகுவாக்க பல வழிகள் உள்ளன. அதுபோல, எங்கள் மனம் சொல்லும் ஒரே மார்க்கமே, சரியானது எனவும் நினைக்கக் கூடாது.  

மனம் மாறும் தன்மை கொண்டது. நல்ல விடயங்களைச் செய்வதற்காக, எமது சிந்தனைகளை வழிப்படுத்தி, வேறு வழிகளில் அதை மாற்றி, புதியன செய்து மகிழலாம். 

யாரோ எவரோ சொன்னவைகளுக்காக, விடாப்பிடியாகச் சில காரியங்களை ஆராயாமல் செய்வதுண்டு. இந்தக் குருட்டு நம்பிக்கைகள் எமது பலத்தை வீணடித்தும் விடலாம். ஒரே பக்கமாகச் சாய்வது, புத்திசாலித்தனமல்ல; முட்டாள்த்தனம்தான்.  

காலம் கழிந்தபடி உள்ளது. நேரவிரயம் ஆபத்தானது. சிந்தித்து நல்ல மாற்றங்களைச் செய்தால், காலம் விரயமின்றிப் பொன்போல் பெறுமதியாகிவிடும்.

வாழ்வியல் தரிசனம் 02/05/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X