Princiya Dixci / 2016 நவம்பர் 23 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொலைக்காட்சியில் ஒருவர் தாங்கள் மக்களுக்கு ஞானமூட்டும் விதத்தினை இப்படிச் சொன்னார்.
“நீங்கள் நோய்வாய்ப்பட்டால் ‘கப்சியூல்ஸ்’ (கூட்டுக்குளிசை) எடுக்கின்றீர்கள். அது உங்கள் நோய்களை உடனே நீக்கிவிடுகின்றது. அது போலவே நாங்களும் உங்களுக்கு மூன்றே மூன்று நாட்கள் தியானப் பயிற்சியின் ஊடாகத் தியானத்தை முழுமையாகச் சொல்லிக் கொடுக்கின்றோம்” என்றார்.
மனம் அற்ற நிலையே தியானம் ஆகும். இன்று எத்தனை பேர் மனம் அற்ற நிலையை அடைந்து விட்டார்கள்? மனம் அற்ற தியான நிலை என்ன சாதாரணமா? ரிஷிகள் எத்தனை வருடங்கள் தவம் இருந்து பெறும் நிலையல்லவா? இது என்ன விற்பனைக்குரிய வியாபாரமா?
மூன்று நாட்களில் ஞானியாக்க முடியும் என்று எத்தர்கள் சொன்னதைக் கேட்டு, இலட்சாதி இலட்சம் மக்கள் கூடுகின்றார்கள். வெட்கம்!
வாழ்வியல் தரிசனம் 23/11/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .