2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘மன்னித்தலே நெருக்கத்தை உருவாக்கும்’

Editorial   / 2018 பெப்ரவரி 08 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உறவுகள், எங்கள் வம்ச விருத்திக்கான நிறைவைத் தந்து, பிணைப்புகளைத் தொடரச் செய்கின்றன. என்றும் எங்களைச் சார்ந்த எவரையும் வெறுப்பதோ, ஒதுக்குவதோ ஒத்துக்கொள்ள இயலாத உண்மை. எனினும், மனித உறவுகள் நூல்இழைபோல் ஆகக்கூடாது. கண்ணாடி போல் உடைந்து நொறுங்கவும் ஆகாது.

மனஸ்தாபத்தால் ஏற்படும் பிரிவு, சில சமயங்களில் நிரந்தரமான பிளவாகவும் கூடும். நூல்இழை அறுபடாமல், அதன் இறுக்கத்தை வலுவாக்குவது மனிதர் ஒவ்வொருவரின் கடனாகும். உடைந்து போன கண்ணாடியை முன்னர் இருந்ததுபோல் ஒட்டி, பழைய உருவத்தை வழங்குதலும் சிரமம்தான்.

தப்பான அபிப்பிராயங்களும் ஆணவப்போக்கும் உறவுகளை இழக்கச்செய்ய அனுமதிக்கக்கூடாது. மன்னித்தலே உறவுகளில் நெருக்கத்தை உருவாக்கும்.

வாழ்வியல் தரிசனம் 08/02/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X