Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வறுமை ஒரு தகைமை. செல்வந்தர்களுக்குப் பொருள் இருந்தும் வெறுமையானவர்களாக வாழ்வதுண்டு. ஆனால், வறுமை ஒருவரைச் செப்பமிட்டு, மேன்மைப் படுத்தி விடுகின்றது; இது உண்மை.
மிகவும் பிரயாசைப்பட்டு முன்னுக்கு வந்தவர்களில், பலர் முன்பு வாழ்ந்த வாழ்க்கையை நினைவு கூராமல், தாங்கள் பிறவிப் பணக்காரர்கள் எனப் பொய் உரைப்பதுண்டு.
தாங்கள் பட்ட துன்பங்கள், எதிர் நீச்சல் பற்றி, என்றும் மறவாது, அதனைப் பிறருக்கும் சொல்லி, எல்லோரையும் துணிச்சல் மிக்கோராக உருவாக்கும் பரோபகாரிகளும் இருக்கிறார்கள்.
ஒருவர் உயர்ச்சியடைவது, அவர் ஏனையோரையும் எழுச்சி மிக்கோராக மாற்ற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாகும். கொடுக்கும் கரங்களுக்கு அவன் அருள் நித்தம் சுரக்கும்.
ஏழைகள் செய்யும் தானம்போல், வசதியுள்ளவர்கள் செய்கின்றார்களா என்பது, சந்தேகத்துக்குரியதுதான். ஏழைகளின் வலி ஏழைகளுக்கே புரியும். எல்லோரும் நல்லதை நினைத்தால், ஏழ்மை ஏது ஐயா?
வாழ்வியல் தரிசனம் 18/08/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago