2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

‘வலிந்து நுழைந்து பேசுதல் அழகல்ல’

Editorial   / 2017 ஜூலை 07 , மு.ப. 10:00 - 1     - {{hitsCtrl.values.hits}}

உறவினர்களாயினும் சரி, எமக்கு வேண்டப்பட்ட எவராயினும் சரி, நாங்கள் உரிமை எடுக்கும்போது அது மிகையானதாக இருத்தலாகாது. 

எந்த வஞ்சனையுமின்றி, அப்பாவித்தனமாக உரிமையுடன் பேசும்போதும் பழகும்போதும் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு அறவே பிடிக்காமல் போகலாம்.  

நீங்கள் ஒருவரது இல்லத்துக்குச் செல்லும்போது, அவர்களுக்கு அறிவித்துவிட்டுச் செல்லுங்கள். நீங்கள் செல்லும் வீட்டுக்காரர் சொந்தக் காரணங்களால் அந்த நேரம் உங்கள் வருகையை விரும்பாமலும் இருக்கலாம். 

எவரதும் அந்தரங்க வாழ்க்கையில் நீங்கள் வலிந்து நுழைந்து பேசுதல் அழகல்ல; உரிமையும் அல்ல. 

எதிலும் நாசுக்காகவும் எச்சரிக்கையும் கொண்டு இயங்கும்போது, அவர்கள் மீதான அன்பை மட்டும் நிலையாக வைத்திருங்கள். அவர்களுக்கு உங்களைப் பிடிக்காமல் இருந்தாலும் கூட! 

 

   வாழ்வியல் தரிசனம் 07/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 1

  • balakiddinar Saturday, 08 July 2017 11:06 AM

    good

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .