2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘வழங்காதவனே ​ஏழை’

Editorial   / 2017 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்போகும் முன் உள்ள ஓரிரு வினாடிகளுக்கு முன்னர் கூட, அடுத்த வீட்டுக்காரனுக்கு விட்டுக்கொடுக்காமல், வீம்புடன் சவால் விட்டு, இறக்கின்ற பேர் வழிகள், எதைச் சாதிக்கப் போகின்றார்கள்?  

போன உடல் போனதுதான். உயிருடன் வாழும் வாழ்க்கை, மேலானதாக இருக்கத் தானதருமம் தாராள மனத்துடன் செய்து, எல்லோரையும் அரவணைத்தால்தான் என்ன?   இந்த உடல் களிப்புடன் இருப்பதைவிட, இந்த ஆன்மா உவகை எய்துதலே மேலானது. இது பிறருக்காகச் செய்யும் கைங்கரியங்களினால் பெறுவதாகும்.  

கொடுத்துப் பாருங்கள் அந்த இனிய சுகானுபவம் எப்படி என்பதை உணர முடியும். உலோபிக்கு இந்தக் கொடுப்பனவுகள் இல்லை. 

வழங்காதவனே ​ஏழை; கொடுப்பவன் கோடி சுகம் காண்கின்றான்.  

   வாழ்வியல் தரிசனம் 31/08/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .