Editorial / 2018 ஜூலை 10 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொய் பேசக்கூடாது; பொய்யாகச் சிரிக்கக்கூடாது; பொய்யாக நடித்தல் ஆகாது; பொய்யாக அழவும் கூடாது. இத்தகைய துர்க்குணங்களுடன் வாழும் ஒருவர், தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதுடன் உலகத்துக்கும் ஊறு விளைவிக்கும் மகாபாவியும் ஆகிறான்.
பொய்மையுடன் புரள்வது இழிவு; வாய்மையுடன் வாழ்வதே சிறப்பு. நல்லவைகளைப் பிடிக்காதவர் நலிவடைவார். கண்ணியத்தைக் கடைப்பிடிப்போர், எண்ணியவை எல்லாம் கிடைக்கப் பெறுவர்.
துன்பமே காணாத வாழ்வைப் பெற, சிறப்பான எண்ணங்களை மட்டுமே நோக்கினால் போதும்.
பூக்களைப் போன்ற நெஞ்சங்களால் மட்டுமே, உலகைச் சிருஷ்டிக்க முடியும். அழகிய அன்பான சொற்களால், புவனத்தைச் சோதனை செய்க. வார்த்தைக்கு வலிமையுண்டு என்பதை உணர்க.
கனிவுடன் சகலரையும் அரவணைப்பது, பேதமற வாழுகின்ற முறையைக் கற்றுத்தருகின்றது.
வாழும் வாழ்க்கை, பரந்த உலகை உங்களுக்கே சொந்தமாக்குகின்றது.
வாழ்வியல் தரிசனம் 10/07/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
17 minute ago
22 minute ago
42 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
22 minute ago
42 minute ago
46 minute ago