2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

‘விழிகளின் உணர்வுகளை அறிவது எளிதன்று’

Editorial   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

விழிகளுக்கு வல்லமை அதிகம். இதன் திடமான பார்வை, இரும்பு போன்ற மனிதனையும் வளைக்கும்; காதலைப் படைக்கும்; கருணை வளர்க்கும்; கோபத்தைக் கரைக்கும்; விழிகள் ஊடாக நெஞ்சத்துக்குப் பாயும்.  

தனது விழி அஸ்திரத்தால் மாவீரர்களையே தம்வசம் இழுத்த பெண்களைப் பற்றிய, சரித்திரங்கள் பலவுண்டு. இதே வி​ழி நோக்கில், பல அழிவுகளும் நிகழ்ந்துள்ளன. 

கருணைக் கண்களால் முழு உலகையும் சுவீகரித்த ஞானிகள் பலர், உலகுக்கு அருள்ஞான ஒளியூட்டினர். ஊனக்கண், ஞானக்கண் என இரண்டு கண்கள் உண்டு எனப் பெரியோர்கள் கூறுவர். 

கண் இருந்தும் பார்வையற்றவர்கள் போல் வாழ்பவர்களும் இருக்கின்றார்கள். ஞானக்கண் வீச்சினால் உலகை உணர்ந்தவர்கள் பற்றியும் உலகம் பேசுகின்றது. நல்ல நெஞ்சம், பலகோடி விழிகளின் பார்வையைவிடத் தீட்சண்யமானது. செவிப்புலனற்ற இசைமேதை பீத்தோவன், பல்வேறு இசை நுட்பங்களைக் கண்டறிந்தார். இது எப்படி? இவை நெஞ்சத்தின் ஊற்று; விழிகளின் உணர்வுகளை அறிவது எளிதன்று.

வாழ்வியல் தரிசனம் 17/04/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X