Editorial / 2017 ஜூன் 17 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கவலைப்படுபவர்களை இரண்டு பிரதான பிரிவுகளாகப் பிரிக்க முடியும். ஒருசாராரின் கவலையில் நியாயம் இருக்க முடியும். ஏழ்மையின் தாக்கம், நோய், குடும்பப் பிரச்சினை எனச் சொல்லலாம்.
இரண்டாவது வகையினர் தேவையற்ற விதத்தில் கவலைப்படுபவர்கள். இவர்கள் பேசுவதும் மிக வேடிக்கையாக இருக்கும். தாங்களே தங்களுக்குள் துன்பம் வரும் என்பார்கள்; வேண்டாத விடயங்களை நோக்குவார்கள். பின்னர் அழுது புலம்புவார்கள். மிகவசதியாக இருப்பவர்கள்கூட, தேவையற்று மனம் வெதும்புவார்கள்.
வெளியுலகத் துன்ப நிகழ்வுகளைக் கண்டுகொள்ளாமல், தங்கள் வாழ்க்கையையே அலசியலசிப் பித்தர்கள்போல் பேசுவதும் அழுவதும் கேட்கச் சகிக்காது. ஆனால், இவர்கள் கூட, பரிதாபத்துக்குரியவர்களேயாவர்.
தங்களை மட்டும் சிந்தித்துப் பிறர் நலன் நோக்காது விட்டால், தேவையற்ற துன்பங்கள்தான் தொடரும். வேண்டாம் இது!
வாழ்வியல் தரிசனம் 16/06/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .