Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 08 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒருவாரத்தின் பின்னர் வீட்டுக்கு வந்தபோது, திருமண அழைப்பிதழைத் தாயார் அவனிடம் கொடுத்தார். தனது காதலிக்கும் வேறுஒருவனுக்குமான திருமண அழைப்பிதழைக் கண்டால் எப்படி மனநிலை இருக்கும்?
நான் அவளைச் சந்தித்தபோது, எதுவுமே சொல்லவில்லையே? திடீர் என நிச்சயம் பண்ணிவிட்டார்களா? வெறுத்துப்போனவன் உடனே அலுவலக விடுமுறை எடுத்துக்கொண்டு, வெளியூருக்கு விரக்தியுடன் சென்றுவிட்டான்.
கொஞ்சநாள் கழித்து, ஊருக்குத் திரும்பிவரும்போது, வழியில் காதலியைத் தனியாகக் கண்டான். “உனக்குத் திருமணமாயிற்றே ஏன் தனியாக வருகின்றாய்” எனக் காட்டமாகக் கேட்டான்.
அவளும் பதிலுக்கு, “ யாருக்குத் திருமணமானது; நீ எல்லாம் ஒரு மனுஷனா? கோழைபோல் எங்கே ஓடிவிட்டாய்; திருமணம்தான் என்னால் நின்றுவிட்டதே; எனது தோழிகள் மூலம் திருமணத்தன்றே அதனை நிறுத்தச் செய்துவிட்டேன்? என ஆவேசத்துடன் சொன்னாள்.
“மன்னித்துவிடு” என அவன் சொல்ல, விம்மலுடன் அவன் மார்பில் சாய்ந்தாள்.
திருமணம் முடிந்து இப்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் பிறந்துவிட்டன. வைராக்கிய காதல் என்றும் உயிர்ப்புடன் வாழும்.
வாழ்வியல் தரிசனம் 07/12/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .