Princiya Dixci / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேமிக்கும் பழக்கம் சிறந்தது; அதற்காகத் தர்மம் செய்யாமல் இருத்தலாகாது.
நாங்கள் இந்த உலகில் நீக்க முடியாத ஓர் அங்கத்தினர்களே! எனவே உலக மக்களிலிருந்து விடுபட முடியாது.
எங்களுக்காகச் சேமிக்கும் நாம், எங்களோடிணைந்த சமூகத்திற்கும் ஏதாவது எம்மால் இயன்றதைச் செய்தல் எங்களது தலையாய கடமைதான்.
அடுத்த தலைமுறைக்காகச் சேமிக்கும்போதே, எங்கள் கண்முன்னே வாழும், இந்தத் தலை முறையின் உடன் பிறவாதச் சகோதர, சகோதரிகள், ஏதிலிகளை நோக்கக் கூடாதா?
நன்றாகச் சிந்தித்தால் நாம் எல்லோருமே, எங்கள் உறவினர்களைவிட முகம் தெரியாத நபர்களிடம்தான் கடமைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
எப்போதும் பிறரிடமே ஏதோ ஒரு முறையில் அனுகூலம் பெற்று வருகின்றோம்.
எல்லோருமே வேண்டப்பட்டவர்கள்தான்! இந்த உலகம் ஒரு பெரிய வீடு. மக்கள் அனைவரும் அதன் குடியிருப்பாளர்கள். விடுபட முடியாத உறவுகள்!
வாழ்வியல் தரிசனம் 19/10/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .