2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விரிந்த மனம், முதுமையையும் இளமையாக்கும்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவன், மனைவியிடம் காதல், சிலிர்ப்பு, புளகாங்கிதம், ஈர்ப்புடன் கூடிய பிரேமை ஆகியவை ஜீவியப் பரியந்தத்திற்கு மேலான ஸ்திரத்தன்மையுடன் நீடித்து வந்தால் அதனைவிடப் பேரின்பம் வேறு ஏது?

காதல் உணர்வு வெறும் உடல் சார்ந்ததோ அல்லது வயது முதிர்வினால் ஏற்படும் அழகின் மாற்றத்தினால் அதன் திறன் இழந்து விடுவதுமல்ல.

மேலும் முதுமையில் கூட ஒரு புதுவித மலர்ச்சியுடன் இணைந்த அழகு தென்படுவதனை உணர்க‚ என்றும் சந்தோசத்துடன் வாழுகின்ற தம்பதியினரைக் காணும்போது அவர்களின் முகமலர்ச்சியைப் பார்க்கலாம்.

ஒருவருக்கு ஒருவர் ஆதாரமாக வாழ்வதுதான் இல்லற வாழ்வின் நோக்கமும் முழு ஆயுளுக்குமான இறுகிய பிடிப்புமாகும்.

இத்தகைய இனிய தம்பதியினருக்குப் பிள்ளைகளோ, வேறு தரப்பினரோ தேவையற்ற மனச் சுமைகளை ஏற்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல‚

விரிந்த மனமே முதுமையையும் இளமையாக்கும்‚

வாழ்வியல் தரிசனம் 17/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .