2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 24/11/2015

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேசத் தெரிந்தால் எதனையுமே செய்யலாம் என்கின்ற எண்ணமும், செயலுமே அரசியலை இன்று அருவருப்பாக நோக்கச் செய்துள்ளது.

வாயால் வளைத்துப் போட்டு, மக்களை சிந்தனையற்ற மந்தைக் கூட்டமாக்க விளைவது மாபாதகம். இந்த வலைபின்னும் வேலை எத்தனை காலம் எடுபடப் போகின்றதோ?

நீதி, தொண்டு, மனிதாபிமானம், இவையே உண்மையான அரசியல்வாதிக்கு இலட்சணம். சுரண்டல், சண்டித்தனம், குரோதம் இவைகளால் நாடுபடும் அவஸ்தைகளையே, இத்தகையவர்கள் உருவாக்கி வளர்த்துக் கொள்ள விளைகின்றார்கள்.

நாடு பற்றிக் கரிசனை இருந்தால் தேசம் சுகவாசமாகிவிடும். எமக்கு அது எப்போது எனக் காத்திருக்கும் காலம் இதுவல்ல‚

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .