2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 08/12/2015

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக வாழ்வே அநித்தியம் மாயை என்ற உண்மை உதித்தமையினாலே, ஆசை, மோகம், பயம் எல்லாமே அற்றுப்போய் ஞானிகள் நிறைவான இறைவனை நாடுகின்றார்கள். 

இந்த உண்மையை வெறும் பேச்சளவிலேயே பலரும் பேசி விடுகின்றார்கள். ஆனால், இருக்கும் அத்தனையும் தனக்கே உரித்தானது என உரிமை பாராட்ட விழைகின்றார்கள்.

தத்துவங்களைக் கடைப்பிடிப்பது சாமானியர்களுக்குச் சாத்தியமானதல்ல. 

ஆனால், வாழ்க்கையின் நளினத்தை, அதன் வியாபகத்தை, அனுபவங்களை இரசிப்பதனால் மட்டுமே எமக்கு வெறுமை, விரக்தி ஏற்படாது என்பதை உணருங்கள்.

இருக்கின்ற பொழுதை அழகிய மனசுடன் உலகுடன் ஸ்பரிஸிப்பதில் ஏது தீமைகள் வந்துவிடப் போகின்றன? சற்று நிதானமாகச் சிந்திக்க.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .