2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

உழைப்பின் பெருமையை உணர்ந்தால் வியர்வையின் விலை புரியும்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலதையும் பார்த்து அள்ள எண்ணியதாலேயே இன்று பலர் இருந்ததையும் இழந்து நிற்கின்றார்கள்.

முறையாக உழைத்துச் சேர்த்தால் அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படமாட்டான். உழைப்பின் பெருமையினை உணர்ந்தால்த்தான் மற்றவர் சிந்தும் வியர்வையின் விலையும் புரியும்.

ஆசைப்படுவதிலும் அர்த்தம் இருக்க வேண்டும். கையில் ஒன்றும் இல்லாமல் கண்டதையும் வாங்க முனைதல் கூடாது.

இன்று தவணை முறையில் ஆடம்பரமான பொருட்களை வீடுகளில் குவித்து வருகின்றனர். இவைகளில் பாதிக்கும் மேலானவை பிரயோசனம் அற்றவையாகவே இருக்கும்.

அடுத்தவன் வீட்டைப் பார்த்து தங்கள் வீட்டை அழகுபடுத்தக் கூடாது. சேமிக்க ஆசைப்பட்டால் வீண் பொருட்கள் மீது நாட்டம் வரவே வராது.
 
பிள்ளைகளுக்கு கல்வியூட்ட ஆசைப்படுங்கள்; நல்ல எளிய உணவை வழங்குங்கள்; ஒழுக்க சீலராக உலகில் உயரும் வழியைக் காட்டுங்கள்.

வாழ்வியல் தரிசனம் 16/08/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X