2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

‘பரோபகாரச் சிந்தனைகளை வளர்த்தல் அவசியம்’

Princiya Dixci   / 2017 மே 15 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வெளிநாடு ஒன்றுக்குச் சென்று, 15 வருடங்களைக் கடந்தும் தனது ஒரே மகன், தன்னுடன் தொலைபேசியில் கூடத் தொடர்பு கொள்வதில்லை. முன்னர் கொஞ்ச நாட்கள் தன்னுடன் பேசிவந்தான், இப்போது அவன் திருமணம் செய்து குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றான்”.

தனிமையில் வாழும் ஒரு மூதாட்டி, தனது நிலைபற்றிச் சொன்னவர், “ஆண்டவன் துணையால் எனது கணவரின் ஓய்வூதியம்தான் என்னைக் காப்பாற்றுகின்றது” என்றார்.

மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் உள்ள பிள்ளைகள்கூட, ஏன்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பது புரியவே இல்லை. பெற்றோரின் தியாகம், பட்ட சிரமங்களை உணராமல், வாழ்வதற்கு வெளிநாட்டு வாழ்க்கை முறையினைக் காரணம் காட்ட முடியாது. இங்கு வாழும் பிள்ளைகளில் சிலரும் தாய், தந்தையைக் கவனிக்காமல் இருப்பதுண்டு.

பிள்ளைகள் மீதான அதீத கட்டுப்பாடுகள், சமூகத்திலிருந்து அவர்களைப் பிரித்துத் தனிமைப்படுத்தல் போன்றவை தவிர்க்கப்படல் வேண்டும். பரோபகாரச் சிந்தனைகளை வளர்த்தல் அவசியமானது.

 

வாழ்வியல் தரிசனம் 15/05/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X