Yuganthini / 2017 ஜூலை 19 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
 சீனாவில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த பெண் உழைப்பினால் இன்று உலகப் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்
சீனாவில் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த பெண் உழைப்பினால் இன்று உலகப் பெண் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்
சோ கன்பே (Zhou Qunfei) என்ற 47 வயதான பெண் தொழிலதிபரே இந்தச் சாதனைக்கு உரித்தானவர் ஆவார்.
இவர், வறுமையின் காரணமாக தனது 16 ஆவது வயதில் கல்வியை நிறுத்திவிட்டு கடிகாரங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
| அத்துறையில் உள்ள தொழில் சார்ந்த நுட்பங்களைத் திறமையாகக் கற்றுக்கொண்டார். கடிகாரங்களில் காணப்படும் லென்சுகள் குறித்த நுணுக்கத்தைக் கற்றுக்கொண்டு, தனது 23 ஆவது வயதில் கடந்த 1993 ஆம் ஆண்டு, கடிகார லென்சுகளைத் தயாரிக்கும் “லென்ஸ் டெக்னொலஜ்” (Lens Technology ) என்ற நிறுவனத்தை தொடங்கினார். 10 ஆண்டுகளுக்கு பிறகு 2003 ஆம் ஆண்டு, பிரபல செல்போன் நிறுவனமான மோட்டோரோலா தமது ஓர்டர்களை வழங்கியது அதன் பின்னர் சாம்சுங் நிறுவனம், அப்பிள் நிறுவனம் ஆகியனவும் இவருக்கு பல ஓர்டர்களை வழங்கியது.. தற்போது 32 தொழிற்சாலைகளின் தலைவராக உள்ளதுடன் சுமார் ஒரு இலட்சம் ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிவுள்ளார். இந்தப் பெண் தொழிலதிபரின் சொத்து மதிப்பு 9.2 பில்லியன் டொலர் ஆகும். இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு 11 பில்லியன் டொலர். ஆகும். | 
37 minute ago
39 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
39 minute ago
43 minute ago
2 hours ago