Kogilavani / 2017 நவம்பர் 25 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம், உடல்நலக் குறைவால், தனது 70ஆவது வயதில் இன்று காலமானார்.
அறுபதுகளிலேயே நடிப்பைத் தொடங்கிய சண்முகசுந்தரம், சிவாஜி கணேசன் நடித்த இரத்தத் திலகம் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு, நத்தையில் முத்து, இதயக்கனி, ஆதித்யன், குறத்தி மகன், மாப்பிள்ளை அழைப்பு, சக்திலீலை, லட்சுமி கல்யாணம், வாழையடி வாழை, அவளுக்கு நிகர் அவளே, கரகாட்டக்காரன், சென்னை 60028, தமிழ் படம் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் பெரும்பாலான படங்களில் சண்முகசுந்தரம் முக்கிய வேடத்தில் தோன்றுவார்.
இவரது தங்கைதான் பழம்பெரும் நடிகை சந்திரகாந்தா. எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், கரகாட்டக்காரன் படம்தான் சண்முகசுந்தரத்தை மிகப் பிரபலமாக்கியது. அவர் நடித்த கடைசி படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன்.
அண்ணாமலை, செல்வி, அரசி, வம்சம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும், சண்முகசுந்தரம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
36 minute ago
38 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
38 minute ago
42 minute ago
2 hours ago