A.P.Mathan / 2011 ஜூலை 23 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச புகழ்பெற்ற பொப் பாடகி அமி வைன்ஹவுஸ் நேற்று சனிக்கிழமை இரவு லண்டனில் காலமானார்.
சர்வதேச புகழ்பெற்ற பாடகியான அமி இறக்கும்போது வயது 27. மிக இளம் வயதிலேயே தனது அதீத திறமையினால் உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் மனதில் குடிகொண்டவர். இசைக்காக வழங்கப்படுகின்ற அதி உன்னத விருதான 'கிரம்மி' விருதுகள் ஐந்தினை தட்டிச்சென்ற பாடகி என்ற பெருமையும் இவருக்குண்டு.
இளம் வயதிலேயே தனது இசைத்திறமையால் ரசிகர்களை கொள்ளை கொண்டதுபோல் தனது வாழ்விலும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகியிருந்தார். போதைப்பொருள் பாவனை இவரது சாவுக்கும் வழிவகுத்திருக்கிறது. அதிக போதைப் பாவனையினால் பலமுறை அவதிப்பட்டிருக்கிறார். எது எப்படியிருப்பினும் இசையுலகிற்கு ஒரு பேரிழப்பாக அமி வைன்ஹவுஸின் இழப்பு அமைந்திருக்கிறதென்னமோ உண்மைதான்.

5 minute ago
22 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
22 minute ago
55 minute ago