A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரபல ஹொலிவூட் நடிகர் வில்ஸ் ஸ்மித்தின் திருமண வாழ்வு முடிவுக்கு வரலாம் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தனக்கெனவொரு தனிப்பாணியை அமைத்து இசைத்துறையிலும் நடிப்பிலும் உலகளாவிய மக்களின் மனங்களில் குடிகொண்டவர் வில்ஸ் ஸ்மித். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை இவரது நடிப்புக்கு ரசிகர்களாக இருக்கின்றமை சிறப்பானதாகும்.
உலகின் பிரபலங்கள் வரிசையில் இருக்கின்ற வில்ஸ் ஸ்மித்தின் திருமண வாழ்வு முடிவுக்கு வரவுள்ளது என்ற செய்தியே இப்பொழுது ஹொலிவூட்டில் மிகவும் பேசப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது. ஏற்கனவே 92ஆம் ஆண்டு ஷெரி ஷம்பினோ என்ற பெண்ணை திருமணம் முடித்த வில்ஸ் 95ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துகொண்டார். அதன் பின்னர் 1997ஆம் ஆண்டு ஜடா பின்கற் என்னும் நடிகையினை திருமணம் முடித்து இற்றைவரை வாழ்து வருகிறார். இந்நிலையிலேயே ஜடாவிற்கும் வில்ஸிற்கும் கருத்து முறண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் இருவரும் தற்சமயம் பிரிந்து வாழ்ந்துவருவதாகவும் அவர்கள் விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாகவும் செய்திகள் பரவியிருக்கின்றன.
உலகின் முன்னணி விருதுகள் பலவற்றினை வென்றெடுத்து மக்கள் மனங்களையும் வென்ற வில்ஸ் ஸ்மித் ஏன் இப்படி ஒரு முடிவினை எடுக்கின்றார் என்ற குழப்பம் அவரது ரசிகர்கள் மனதில் ஆழமாக எதிரொலிக்கிறது. இது வெறும் வதந்தியாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் வில்ஸில் ரசிகர்கள் மன்றாடுகிறார்கள்.
விவாகரத்து செய்திகள் பரவலாக வெளிவரத் தொடங்கிய நிலையில் வில்ஸ் - ஜெடா தம்பதிகள் கூட்டாக அறிக்கை ஒன்றினையும் விடுத்திருக்கிறார்கள். எங்களில் 13 வருட திருமண வாழ்க்கை இன்னமும் நல்லமுறையில் தொடர்ந்து வருகிறது. இதனை பொறுக்க முடியாத சிலர் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நாங்கள் இருவரும் இணைபிரியாத தம்பதிகளாக எப்பொழுதும் இருப்போம் என அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
நெருப்பில்லாமல் புகைவராது என்பார்கள். அதற்கமைய வில்ஸ் குடும்பத்திலும் ஏதோவொரு குழப்பம் இருப்பதாகவே இன்னமும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள். வில்ஸ் - ஜெடா தம்பதிகளின் திருமண வாழ்வு நிலைக்குமா இல்லையா என்று காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.

19 minute ago
52 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
52 minute ago
3 hours ago