Super User / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 07:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மெஹாமட் அஸாருதீனின் மகனான மொஹமட் அயாஸுதீன் வாகன விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். அயாஸுதீன் வைத்தியசாலையில் உயிருககு போராடி வருவதகா தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவ்விபத்தில் சிக்கிய, அஸாருதீனின் மருமனான அஸ்மல் உர் ரஹ்மான் உயிரிழந்துள்ளார்.
அயாஸுதீன் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச்சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து சரிந்து வீழ்ந்து சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டதாhக பொலிஸார் தெரிவிக்கின்றனர் ஹைதராபாத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து இடம்பெற்றபோது மொஹமட் அஸாருதீன் லண்டனிலும் அவரின் மனைவி துபாயிலும் இருந்தனர். விபத்து குறித்து அறிந்த அஸாருதீன் உடனடியாக இந்தியாவுக்குத் திரும்பினார்.
அயாஸுதீன் யூஸுப்குடாவிலுள்ள சென் மேரிஸ் கல்லூரியில் உயர்தர இரண்டாம் வருட மாணவர் ஆவார்.
16 வயதான அஸ்மல் உர் ரஹ்மான் அதே கல்லூரியில் இடைநிலை வகுப்பு மாணவர் ஆவார். இவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கலீல் உர் ரஹ்மானினது பேரனும் மொஹமட் அஸாருதீனின் சகோதரியின் மகனுமாவார்.
16 minute ago
49 minute ago
2 hours ago
Kethis Monday, 12 September 2011 08:35 PM
ஆழ்ந்த அனுதாபங்கள்
Reply : 0 0
Nirmalalraj Tuesday, 13 September 2011 12:28 AM
போக்குவரத்து வீதிகளில் வேகம் கூடாது. அயாஸுதீன் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
Reply : 0 0
jampettah Tuesday, 13 September 2011 04:29 AM
ஆழ்ந்த அனுதாபங்கள்.
Reply : 0 0
pasha Tuesday, 13 September 2011 02:56 PM
அசாருதீன் ஒரு நடிகையை பின் தொடர்ந்தார் இந்த அயாஸுதீன் யாருடைய குழந்தை?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
49 minute ago
2 hours ago