Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 26 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருமேனியாவின் சுற்றுலாத்துறை அமைச்சரான எலினா அட்ரியா, சஞ்சிகையொன்றுக்கு கவர்ச்சியாக போஸ்கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான 37 வயதான எலினா அட்ரியா, உடலை வெளிப்படுத்தும், இறுக்கமான ஆடை அணிந்து கவர்ச்சியாக தோன்றும் புகைப்படம் டபு எனும் ருமேனிய பெஷன் சஞ்சிகையின் முன் அட்டையில் இடம்பெற்றுள்ளது.
கிளோபட்ரா, ஜாக்குலின் கென்னடி, மார்கரெட் தட்சர், ஈவா புரோன், மடோனா போன்ற புகழ்பெற்ற பெண்களின் ஆடை அலங்காரங்கள் தொடர்பாக எலினா எழுதிய கட்டுரையும் அச்சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளது.
'சாதாரண ஊழியர்கள் என்பதை விட தாம் சற்று முன்செல்ல வேண்டும் என்பதை வெளிப்படுத்தக்கூடிய பெண்கள் பலர் உள்ளனர்' என அவர் தெரிவித்துள்ளர்.
"உலகில் அரசியல் நடைபெறும் முறையை மாற்றிய பெண்களை இங்கு நான் குறிப்பிடுகிறேன். ஆண்கள் கண்டுபிடித்த இந்த (அரசியல்) விளையாட்டில் அவர்களைவிட சிறந்த விளங்கக்கூடியவர்கள் தாம் என்பதை இப்பெண்கள் நிரூபித்துள்ளனர்.
அந்த வகையில், ருமேனியாவின் பெரிய அரசியல் கட்சியொன்று முக்கிய அரச செயற்பாடுகளில் துணிவான, திறமையான பெண்கள் பங்குபற்றுவதை ஊக்குவிப்பi காண்பதற்கு நான் மிக விரும்புகிறேன்" என எலினா அட்ரியா மேலும் கூறியுள்ளார்.
பெஷன் துறையில் ஆர்வம் மிகுந்த எலினா, ஒரு தடவை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை காணச் சென்றபோது அங்குள்ள பெண்களுக்காக லொறி நிறைய குதிகால் உயர்ந்த பாதணிகளை கொண்டு சென்றமைக்காக விமர்சிக்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்களை அழகாக தோன்றச் செய்வதற்காக தான் அப்பாதணிகளை கொண்டு சென்றதாக அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.
"அவர் ஒரு திறமையான அரசியல்வாதி. ஆனால் இம்மாதிரியான நடவடிக்கைகள் அவருக்கு ஏனைய பெண்களுக்கோ உதவப்போதில்லை" என அமைச்சர் எலினா அட்ரியாவை ஒருவர் விமர்சித்துள்ளார்.
25 minute ago
36 minute ago
59 minute ago
Shafraz Thursday, 01 December 2011 06:06 AM
Why have they made this as an issue?
is it a sin? if so, it is to all others who wear so, isn't?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
36 minute ago
59 minute ago