2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

2012இல் அதிகம் சம்பாதித்த பிரபலங்கள்: மடோனாவுக்கு முதலிடம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த பிரபலங்கள் பட்டியலில் பொப்பிசை பாடகி மடோனா முதலிடத்தில் பெற்றுள்ளார்.

கடந்த 2013 ஆண்டு அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை தயாரித்துள்ளது.

இப்பட்டியலில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இரண்டாம் இடத்திற்கு தள்ளவிட்டு தள்ளி பாப் பாடகி மடோனா(55) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மடோனா கடந்த ஆண்டு எம.;டி.என்.ஏ சுற்றுப்பயணத்தில்தான் அதக வருவாயை ஈட்டியுள்ளார்.

இவர், ஜூன் மாதத்துடன் முடிந்த ஓராண்டில் மட்டும் ரூ.850 கோடி சம்பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த ஓராண்டில் ரூ.680 கோடி சம்பாதித்துள்ளார்.
அவரது லிங்கன் படம் சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

இ.எல்.ஜேம்ஸ் பாப் மொகல் சைமன் காவெல் மற்றும் 50 ஷேட்ஸ் ஆஃப் கிரே புத்தகத்தை எழுதிய இ.எல். ஜேம்ஸ் ஆகியோர் ரூ.646 கோடி வருவாயுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். அவர்களுடன் அமெரிக்க ரேடியோ பிரபலமான ஹோவர்ட் ஸ்டெர்னும் 3ஆவது இடத்தை பகிர்ந்துள்ளார்.

ஓப்ரா வின்ப்ரே டிவி ஷோ பிரபலமான ஓப்ரா வின்ப்ரே ரூ.523.6 கோடி வருவாயுடன் 14வது இடத்தில் உள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .