Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங்கிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் யுவராஜ் சிங்கின் நுரையீரலில் கட்டி இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்நிலையில் அண்மையில் அமெரிக்கா சென்று இக்கட்டியை அகற்றுவது தொடர்பில் சிகிச்சை பெற்றார் யுவராஜ். அங்கு பெறப்பட்ட அறிக்கைகளின்படியே யுவராஜிற்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
யுவராஜ் சிங்கிற்கு சிகிச்சையளித்துவரும் வைத்தியர் ஜதின் சௌத்தரி இது தொடர்பில் குறிப்பிடுகையில்...
”யுவராஜிற்கு புற்றுநோய் இருப்பது உண்மைதான். ஆனால் இது 100 வீதம் குணப்படுத்தக்கூடிய புற்றுநோய் என்பது ஆறுதலான விடயம். ஆகையினால் இவ்விடயம் தொடர்பில் பயப்படத் தேவையில்லை. முறைப்படி சிகிச்சை பெற்றால் மே மாதத்திலிருந்து மீண்டும் புத்துணர்வுடன் யுவராஜினால் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட முடியும். இது ஓர் அபூர்வமான புற்றுநோய் கட்டி. இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டதால் இலகுவில் குணப்படுத்திவிடலாம்...” என்று கூறியுள்ளார்.
”நுரையீரலின் மேற் பகுதியில் - இதயத்திற்கு கீழாக இந்த புற்றுநோய் கட்டி காணப்படுகிறது. இதனால் அறுவைச் சிகிச்சை செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம். ஆகையினால் “கீமோ தெரபி“ எனப்படும் மருத்துவ சிகிச்சை மூலம் இக்கட்டியை கரைக்க முடியும். இந்த புற்றுநோய் கட்டியினை 100 விகிதம் அகற்றிவிட முடியும். அந்த சிகிச்சையினை யுவராஜ் சிங் - மார்ச் மாதத்தில் மேற்கொள்வது தொடர்பில் ஆராயப்படுகிறது. அப்படி அது சாத்தியப்படுமானால் ஏப்ரல் இறுதியில் யுவராஜ் குணமடைந்துவிடுவார். மே மாதத்திலிருந்து பழைய பலத்துடன் யுவராஜினால் விளையாட முடியும்...” என்றும் டாக்டர் சௌத்தரி மேலும் கூறியுள்ளார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
emarat Monday, 06 February 2012 03:10 AM
சிகிச்சை மூலமாக இப்புற்று நோயில் இருந்து பூரண குணமடைந்து மீண்டும் கிரிக்கெட்டில் ஜொலிப்பதே எமது எதிர்பார்ப்பு.. .- ஒரு இலங்கை கிரிகெட் ரசிகன்
Reply : 0 0
meenavan Monday, 06 February 2012 05:45 PM
யுவராஜ், கிரிக்கெட்டின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும்,சாம்பலில் இருந்து மீள்பிறவி எடுக்கும் பினிக்ஸ் (phenix) பறவை போல நாட்டிக்காக விளையாடினாரோ, அதே போன்ற மனோநிலையையும், மனவலிமையையும் இறைவன் வழங்கட்டும். பினிக்ஸ் பறவையாக இந்திய கிரிக்கெட்டில் ஜொலிக்க யாசிக்கிறேன்.
Reply : 0 0
pranavan Monday, 06 February 2012 06:24 PM
எப்படியாவது குணமடைந்து மறுபடியும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடவேண்டும். அதுவே எமது பிராரத்தனை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago