2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

தனது வழக்கறிஞரை மணக்கிறார் மொஹமட் ஆமிர்

A.P.Mathan   / 2012 மார்ச் 02 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர் - ஸ்பொட் ஃபிக்சிங் சம்பந்தமான வழக்குகளில் தான் சார்பாக வழக்குகளில் வழக்கறிஞராகச் செயற்பட்ட சயீடா மலிக் என்ற வழக்கறிஞரைத் திருமணம் செய்யவுள்ளதாக பாகிஸ்தானிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய பிரஜையான சயீடா மலிக், 2010ஆம் ஆண்டில் ஸ்பொட் ஃபிக்சிங் சம்பவத்தில் ஆமிர் அகப்பட்டபோது அவரது வழக்கறிஞராக அறிமுகமானார் எனவும், அதன் பின்னர் ஏற்பட்ட நட்பு, காதலாக மாற்றமடைந்து கடந்த ஒரு வருடகாலமாக இருவரும் நெருக்கமாக காதலித்து வருவதாகவும் மொஹமட் ஆமிருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவில் பிறந்த சயீடா மலிக், ஆங்கிலம் மற்றும் பஞ்சாபி மொழிகளில் பரீச்சயமானவர் எனவும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் சட்டப்பிரிவினாலேயே மொஹமட் ஆமிருக்கு அறிமுகம் செய்யப்பட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பொட் ஃபிக்சிங் தகவல்கள் வெளியான பின்னர் வெளியான கலந்துரையாடலில் இடம்பெற்ற சம்பவமொன்றும் அப்பத்திரிகையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சயீடா மலிக், மொஹமட் ஆமிர், அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத்தலைவர் இஜாஸ் பட் மற்றும் அதிகாரிகள் பங்குபற்றிய கூட்டமொன்றில் சயீடா மலிக் கண்ணாடிக் கோப்பையொன்றில் நீரை அருந்தி அதில் தனது "லிப் ஸ்டிக்" அடையாளத்தைப் பதித்து வைத்ததாகவும், மொஹமட் ஆமிர் சிறிது நேரத்தில் தனது தண்ணீர்க் குவளையை விடுத்து அக்குவளையை எடுத்து நீரை அருந்தியதாகவும், அப்போதைய கிரிக்கெட் சபைத்தலைவர் இஜாஸ் பட் இருவரின் காதல் தொடர்பாக அப்போது அறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

19 வயதான மொஹமட் ஆமிரை விட சயீடா மலிக் சில வயதுகள் மூத்தவர் எனவும், இருவரது திருமணமும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் மிகவிரைவில் இடம்பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (க்ரிஷ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .