2025 மே 02, வெள்ளிக்கிழமை

சாகும் முன் அல்போன்சாவின் அழகை ரசித்த காதலன்

Menaka Mookandi   / 2012 மார்ச் 06 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் காதலன் வினோத் குமார் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலையை அடுத்து அல்போன்சாவும் அதிகளவிலான தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்திருந்தார்.

இந்நிலையில், தனது காதலனின் தற்கொலைக்கு சற்று நேரத்துக்கு முன்னர் நடைபெற்ற சுவார்யஷ்யமான சில விடயங்கள் பற்றி பொலிஸாரிடம் தகவலளித்துள்ளார் நடிகை அல்போன்சா.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடன நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. பாட்ஷா, பஞ்சதந்திரம், ஸ்ரீ உள்ளிட்ட பல திரைப்படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவரது தம்பிதான் நடன மாஸ்டர் ரொபர்ட்.

அல்போன்சா, ஏற்கனவே டுபாயைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருப்பினும் தற்போது கணவரைப் பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவரது தம்பி ரொபர்ட் மூலம் சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருடன் நெருக்கமான அல்போன்சா, பின்னர் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அளவுக்கு தீவிரக் காதலில் விழுந்து விட்டார். கடந்த ஒரு வருடமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனராம்.

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு தூக்கில் தொங்கிய நிலையில் அல்போன்சாவின் காதரன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இது தற்கொலை என அல்போன்சா கூறுகிறார். ஆனால் வினோத்குமாரின் குடும்பத்தினர் இது கொலை, அல்போன்சாவும், அவரது தம்பி ரொபர்ட்டும் சேர்ந்து வினோத்குமாரை அடித்துக் கொலை செய்து விட்டனர் என்று குற்றஞசாட்டியுள்ளனர். எனவே இதை சந்தேக மரணம் என்று போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், காதலர் மரணம் குறித்து அல்போன்சா போலீஸாரிடம் சில தகவல்களைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

'நானும், வினோத்குமாரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தோம். எனது சகோதரர் ரொபர்ட்ராஜ், வினோத்குமாருக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள வினோத் வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் முதலில் காதலை சொன்னார்.

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்ததால், முதலில் அவரது காதலை ஏற்க தயங்கினேன். எனது வீட்டில் இந்த காதலை ஆதரித்தார்கள். முதல் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு ஒருவருட காலம் பிரிந்து வாழவேண்டும் என்று எனது சட்டத்தரணி தெரிவித்தார். இதனால் எனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து ஒரு வருடத்துக்காக காத்திருந்தோம்.

இந்த நிலையில் என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வினோத் விரும்பினார். என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தார். அத்துடன், டுபாயில் நடன நிகழ்ச்சி நடத்த போகக்கூடாது என்றும் சொன்னார். திருமணத்துக்குப்பிறகு அதை ஏற்றுக்கொள்வதாக நான் சொன்னேன்.

தற்கொலை செய்வதற்கு முன்பு இரவு 8 மணியளவில் வினோத் அவரது தாயாருடன் காரசாரமாக கையடக்கத் தொலைபேசியில் சண்டை பிடித்துக்கொண்டிருந்தார். பின்னர் தொலைபேசியை வைத்துவிட்டு, வீட்டில் எனது திருமணத்துக்காக வேறு பெண் பார்க்கிறார்கள் என்று கோபமாக சொன்னார். அவரது கோபத்தை தணிக்க நான் அவரை படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றேன். உங்கள் விருப்பப்படி நடக்கிறேன். தயவு செய்து கோபத்தை விடுங்கள் என்றேன்.

என்னை வித விதமான ஆடை அணிந்து அழகு காட்டும்படி ஆசையாக கேட்டார். நானும் அதன்படி நடந்தேன். கடைசியாக சேலை அணிந்து வரும்படி கூறினார். நானும் சேலை அணிந்து வந்தேன். எனது அழகை ரசித்தார். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.

பின்னர் சிகரெட் குடிக்க மலசலகூடம் சென்றார். நான் சேலையை கழற்றிவிட்டு, துண்டை கட்டிக்கொண்டு, வேறு உடை அணிய முயற்சித்தேன். மலசலகூடம் சென்ற அவரை நீண்ட நேரம் காணாததால், துண்டோடு படுக்கை அறையைவிட்டு வெளியில் வந்தேன். அப்போது எதிரில் உள்ள இன்னொரு படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது தான், வினோத்குமார் அங்கு தூக்கில் தொங்கியதை பார்த்து, மார்பில் கட்டியிருந்த துண்டோடு வெளியே ஓடி வந்து உதவி கேட்டேன்.

காவலாளி உள்ளிட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னிலையில்தான், அவரது உடலை தூக்கில் இருந்து இறக்கினோம். அவர் இதுபோல் ஒரு முடிவை எடுப்பார் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை. எனது காதல் நிஜமானது' என்று அல்போன்சா கூறியுள்ளாராம்.

அல்போன்சாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பொலிஸார், அயல்வீட்டுக்காரர்கள், வீட்டின் காவலாளி, உறவினர்கள் என அனைவரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X