Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
A.P.Mathan / 2012 மார்ச் 14 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்செஸ்டர் யுனைட்டட் கழகத்தின் சிரேஷ்ட வீரரொருவர் பாலியல் திரைப்படமொன்றில் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த திரைப்படத்தில் நடித்த பிரதான பாலியல் நடிகரின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த மன்செஸ்டர் யுனைட்டட் வீரர் காட்சிகள் சிலவற்றில் மேலதிகமான ஒருவராக அல்லது பிரதான காட்சிகளோடு சம்பந்தப்படாத ஒருவராக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்திரைப்படத்தில் அவ்வீரர் போலி மீசையொன்றை அணிந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வீரர் உலகப்பிரபலம் வாய்ந்த பாலியல் திரைப்பட நடிகரொருவருடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த போது பாலியல் திரைப்பட சூழல், படப்பிடிப்புகள் எவ்வாறு அமையும் என அறிய ஆவல்கொண்டதாகவும், அதன் காரணமாக அந்த நடிகரிடம் வேண்டுகோளொன்றை விடுத்து அத்திரைப்படத்தில் நடித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அவர் சென்ற பின்னர் அத்திரைப்படத்திலும் இணைந்து பங்குபெறுமாறும் அவருக்கு அழைக்கப்பட்டதாகவும், எனினும் அதை அவர் மறுத்திருந்ததாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.
அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்ததாக அறிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago