2025 மே 02, வெள்ளிக்கிழமை

நான் ஒரு விளையாட்டு வீரன்; அரசியல்வாதி அல்லன்: சச்சின் டெண்டுல்கர்

A.P.Mathan   / 2012 மே 01 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முதன்முதலாக பொதுமக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர், நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டமை மிகப்பெரிய கௌரவம் எனத் தெரிவித்துள்ளார்.

ஒருநாட்டின் ஜனாதிபதி உங்களை நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராகத் தெரிவுசெய்கின்றமை கௌரவமான ஒன்று எனத் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஸ்வர், பிரித்விராஜ் கபூர் போன்ற மிகப்பெரியவர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்கும் கிடைத்துள்ளமை பெருமையானது எனத் தெரிவித்தார். உங்கள் பிரிவில் நீங்கள் வெளிப்படுத்திய திறமைக்காக ஜனாதிபதியால் தெரிவுசெய்யப்படும் போது கௌரவமானது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தோடு தான் ஒரு விளையாட்டு வீரன் எனத் தெரிவித்த அவர், எப்போதுமே விளையாட்டு வீரனாகவே காணப்படுவார் எனவும் தெரிவித்தார். தான் அரசியல்வாதி அல்லன் எனத் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், தனது வாழ்வில் தான் சாதித்தவை அனைத்தும் கிரிக்கெட்டாலேயே சாதித்தவை எனவும் தெரிவித்தார். அத்தோடு விளையாட்டின் அபிவிருத்திக்காக சேவை செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் மாநிலங்களவை வரலாற்றில் நியமன உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெறவுள்ள சச்சின் டெண்டுல்கர், தனக்கு இப்போது அதிகமான பொறுப்புக்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அவரது நூறு சர்வதேசப் போட்டி சதங்கள் பற்றிக் கேட்கப்பட்டமைக்கு, அச்சாதனை கடந்தாண்டு இடம்பெற்ற உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்டதற்கு இணையாகாது எனத் தெரிவித்தார். உலகக்கிண்ணத்தை வெற்றிகொண்ட அந்த நாளே தனது வாழ்வின் மிகப்பெரிய நாள் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X