2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

உடல்நிலை பற்றிக் கேட்பதை நிறுத்துங்கள்: யுவ்ராஜ் சிங்

A.P.Mathan   / 2012 மே 02 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது உடல்நிலை தொடர்பாக தொடர்ந்தும் தன்னிடம் வினவுவதை நிறுத்திக் கொள்ளுமாறு இந்திய அணியின் சகலதுறை வீரரான யுவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அனைவரும் தொடர்ந்தும் தனது உடல்நிலை பற்றி விசாரிப்பதன் காரணமாக தான் நோயாளி என்ற எண்ணம் தொடர்ந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன் என அறியத்தரப்பட்டதும் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகக் காணப்பட்டது எனத் தெரிவித்த யுவ்ராஜ் சிங், ஆனால் வாழ்க்கையில் இவை சாதாரணமானது எனத் தெரிவித்தார். புற்றுநோயிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள ஏராளமாகக் கஷ்டப்பட வேண்டியிருந்தது எனத் தெரிவித்த அவர், அது மிகக்கடினமான போராட்டமாக அமைந்ததாகவும் தெரிவித்தார்.

தனது நோய் தனது குடும்பத்திற்கும் மிகக்கடினமான ஒன்றாகக் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், தனது ரசிகர்களின் ஏராளமான ஆதரவு காரணமாகவே புற்றுநோயிலிருந்து தன்னால் மீளக்கூடியதாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்காவில் சிகிச்சை பெற்று தனது சொந்த வீட்டுக்குத் திரும்பியமை குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அவர், தான் புற்றுநோயிலிருந்து மீண்டதன் காரணமாக ஏராளமானோர் தன்னைப் போலவே புற்றுநோயிலிருந்து மீள்வதற்கு உளப் பலத்தை வழங்கும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

எனினும் அடிக்கடி தனது உடல் நலம் பற்றி அனைவரும் விசாரிப்பதன் காரணமாகத் தான் ஒரு நோயாளி என்ற எண்ணம் ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், அதைத் தவிர்க்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். (க்ரிஷ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .